பொழுதுபோக்குத் துறையை முற்றிலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தி, பிரபல பாடகர் பாபி பிரெளனின் மகன் பாபி பிரவுன் ஜூனியர் புதன்கிழமை (நவம்பர் 18) லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டில் இறந்து கிடந்தார். அவருக்கு வயது 28. நேற்றைய தினம் 1:50 மணிக்கு அவர் வீட்டில் இருந்து அவசரமாக ஒரு மருத்துவ அழைப்பு போன் வர போலீசார் அங்கு விரைந்தனர்.
ஆனால் அங்கு பாபி பிரவுன் ஜூனியரின் உடல் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. இசை உலகில் தனது தந்தையின் அடிச்சுவடுகளை அவர் பின்பற்றிக் வந்தார். அவரது அகால மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை, சமூக வலைதளங்களில் பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது இரங்கல் செய்திகளை குவித்து வருகின்றனர்.