உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். நேற்றைய தினம் பேசிய பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கிராமி விருது உட்பட பல்வேறு விருதுகளை வாங்கிய பிரபல பாடகர் ஜோ டிப்பி கொரோனா நோய் காரணமாக பரிதாபமாக பலியானார். இவருக்கு வயது 61. இரண்டு நாட்களுக்கு முன்பு தான் எனக்கு கொரோனா பாசிடிவ் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த செய்தி அவரது ரசிகர்கள் தலையில் இடியாக விழுந்துள்ளது.
கடைசியாக அவர் தனது முகநூல் பக்கத்தில் "நான் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறேன். எனது குடும்பமும் நானும் தமிமையில் தான் உள்ளோம். எனது ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் விழிப்புடன் இந்த நோயை எதிர்த்து போராட வேண்டும்" என்று கூறி இருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.