www.garudavega.com

சன் டிவியின் புதிய சீரியலில் இணைந்த செம்பருத்தி சீரியல் நடிகை... அவரே வெளியிட்ட பதிவு...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீ தமிழில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கி வரும்  சீரியல் 'செம்பருத்தி'. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த சீரியலுக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். பணக்கார ஹீரோ வீட்டில் பணிபுரியும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக போகும் கதையில் கார்த்திக் ராஜ், ஷபானா, சூரியவம்சம் புகழ் பிரியா ராமன் ஆகியோர் நடித்து வந்தனர். சமீபத்தில் கார்த்திக் அந்த சீரியலில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு தொகுப்பாளரான அக்னி அதில் நடித்து வருகிறார்.

popular sembaruthi serial actress joins sun tv புதிய சீரியலில் இணைந்த செம்பருத்தி நடிகை

அதேபோல் அந்த சீரியலில் மித்ரா என்ற முக்கிய வேடத்தில் நடித்து வந்த பரதா நாயுடு பேசும் உருக்கமான வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ''செம்பருத்தி சீரியில் நான் நடித்த ஒன்றரை வருடத்தில் நிறைய பாலிட்டிக்ஸ் நடந்தது. உள்ள பெரிய போர்களமே நடக்கும். அப்போலா எனக்கு டைரக்டர் சாரும், அன்பு சாரும் தான் சப்போர்ட் பண்ணிட்டே இருப்பாங்க. சில நாட்கள் முன்பு தான் பேசுனேன். மத்தவங்க உன்ன டம்ப் பண்ண நினைக்கிறாங்கனா நீ ஏதோ சாதிச்சிட்டு இருக்கனு சொல்லுவாங்க" என்று கண்ணீர் மல்க கூறியிருந்தார்.

popular sembaruthi serial actress joins sun tv புதிய சீரியலில் இணைந்த செம்பருத்தி நடிகை

தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல், திருமதி செல்வம், விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பான அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் போன்ற பல சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஸ்ருதி. அடுத்ததாக சன் டிவியில் புதிய சீரியலில் நடிக்க இருக்கிறார்.  'தாலாட்டு' என்று இந்த சீரியலுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக இந்தப் புரோமோவை பார்க்கும்போது சுருதிக்கு இந்த சீரியலில் சக்தி வாய்ந்த கதாபாத்திரம் இருக்கிறது என்பது மட்டும் உறுதியாகிறது. தெய்வமகள் சீரியலில் ஹீரோவாக நடித்த கிருஷ்ணா இதிலும்  ஹீரோவாக நடிக்கிறார். இந்நிலையில் இந்த சீரியலில் செம்பருத்தி மித்ரா தற்போது இணைந்துள்ளார்.

மற்ற செய்திகள்

Popular sembaruthi serial actress joins sun tv புதிய சீரியலில் இணைந்த செம்பருத்தி நடிகை

People looking for online information on Mithra, Sembaruthi will find this news story useful.