தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக அறியப்படும் ஷங்கர், இதுவரை தொட்டதெல்லாம் ஹிட் தான்.
பல வெற்றிப்படங்களை தந்த ஷங்கர், தற்போது உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பிலான இந்தியன்-2 படத்தை இயக்குகிறார். சில மாதங்களுக்கு முன்பு தான் ஒரு மாஸான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி பிரபல டோலிவுட் மாஸ் ஹீரோ ராம் சரணுடன் முதல்முறையாக இயக்குநர் ஷங்கர் இணைவதாக தெரியவந்தது.
தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோரின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் உருவாகும் இப்படத்துக்கு எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கிறார். முன்னதாக இந்தியன்-2 படத்தை முடிப்பதற்கு முன்பு வேறு எந்த புதிய படத்திலும் பணிபுரியக் கூடாது என்று ஷங்கருக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டதால், அடுத்த மாதம் (ஆகஸ்ட்) ராம்சரணை ஷங்கர் இயக்கத் தொடங்குவார் என்பது உறுதியாகியுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு தான், தயாரிப்பாளருடன் நடிகர் ராம் சரண், ஷங்கரை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்திருந்தார். இந்நிலையில் தான் தற்போதைய புதிய அப்டேட்டாக, ராஜமவுளியின் ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட தெலுங்கு சினிமாக்களில் பணியாற்றிய பிரபல திரைக்கதை எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா, #RC15 படத்தில் பணிபுரியவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
జెంటిల్ మేన్ సినిమా చూసినప్పుడు
శంకర్ గారితో ఓఫోటో దిగితే ఈజీవితానికి
చాలనుకున్నాను ..ఇప్పుడాయన సినిమాకి మాటలు రాస్తున్నాను ..
Thanks to Sankar sir..
Thanks to Dil Rajugaru.. and
Thanks to our
Mega Power Star Charanbabu🙏🙏🙏 pic.twitter.com/iswy0DabmG
— Saimadhav Burra (@saimadhav_burra) July 13, 2021
இதனிடையே ராம் பொத்தினேனி நடிப்பில் லிங்குசாமி இயக்கும் புதிய மல்டிலிங்குவல் படத்திலும் சாய் மாதவ் புர்ரா தான் தெலுங்கு மொழிக்கான வசனங்களை எழுதுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.