உக்ரைனைச் சேர்ந்த பிரபல பாடகர் ஆன்டி கார்ட்ரைட்(Andy Cartwright) அதிகமாக போதைப்பொருளை பயன்படுத்தி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது மனைவி மெரின் குகல், ஆன்டியின் உடலை துண்டு துண்டாக வெட்டி வாஸிங்மெஷினில் போட்டு கிளீன் செய்துள்ளார்.
பின்னர் கணவர் காணாமல் போனதாக நாடகமாடியுள்ளார். ஆனால் போலீஸ் விசாரணையில் பாடகர் ஆன்டி அவரது வீட்டில் மரணமடைந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரது மனைவியை போலீஸார் விசாரித்த போது, தனது கணவர் போதைப்பொருளை அதிகம் பயன்படுத்தியதால் உயிரிழந்ததாகவும், அவர் இறந்தது ரசிகர்களுக்கு தெரியக் கூடாது என நினைத்ததால் இவ்வாறு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் போலீஸார் உண்மையான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் தனது கணவரின் உடலை கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் கொண்டு துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அதே வீட்டில் தனது 2 வயது மகளுடன் வசித்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.