இந்தியா சார்பாக ஒலிம்பிக்கில் பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கணை என்ற பெருமையை பெற்றவர் கர்ணம் மல்லேஸ்வரி. இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். தற்போது இவரது வாழ்க்கை வரலாறு தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரைப்படமாக உருவாகவிருக்கிறது.
இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கோன வெங்கட் தயாரிக்க, சஞ்சனா ரெட்டி இயக்கவிருக்கிறார். இந்நிலையில் இயக்குநர் சஞ்சனா ரெட்டி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பல்வேறுவிதமாக செய்திகள் வெளியானது.
இதனையடுத்து தயாரிப்பாளர் கோன வெங்கட்( Kona Venkat) தனது ட்விட்டர் பக்கத்தில், ''கர்ணம் மல்லேஸ்வரி பட இயக்குநர் சஞ்சனா ரெட்டி, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். சில தினங்களில் முற்றிலும் குணமாகி வீடு திரும்புவார். தற்போது அவர் வைரல் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அதனால் வதந்திகளை தவிருங்கள்'' என்று விளக்கமளித்துள்ளார்.
Our “Karanam Malleswari” Biopic director @sanjanareddyd is absolutely safe & sound and she would be home in couple of days .. She’s being treated for Viral fever.. Please put an end to all the speculations 🙏
— kona venkat (@konavenkat99) June 9, 2020