சமீப காலமாக தொடர்ச்சியாக பிரபலங்களின் மறைவு செய்திகள் ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. இந்நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர் போக்குரி ராமா ராவ் நேற்று (04/07/2020) மாலை காலாமானார்.
அவருக்கு 65 வயதாகும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தொடர் சிகிச்சையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரது உடல் மிகவும் மோசமடைந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்ப்பட்டுள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது இறுதிச்சடங்குகள் இன்று (04/07/2020) அவரது வீட்டினர் முன்னிலையில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.