'' விஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்'' - முதல்வருக்கு பிரபல தயாரிப்பாளர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் - விஜய் சேதுபதி  இணைந்து நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தின் எடிட்டிங், பின்னணி இசை போன்ற போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பிரச்சனைகள் முடிந்த பிறகு தியேட்டர் திறக்கப்பட்டதும் இந்த படம் வெளியாகும் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான கேயார் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்லது அதில், ''தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் முதல் படமாக விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் திரையிடப்பட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

கொரோனோ வைரஸின்  கொடூரத் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் இந்த சூழ்நிலையில் முதல் படமாக 'மாஸ்டர்' படம் திரையிடப்பட்டால் விஜய்க்கு மட்டுமல்ல விஜய் ரசிகர்களுக்கும் அது கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும் என்பது தான் உண்மை. சாதாரண சலூன் கடைக்கு முடிவெட்ட செல்வதற்கே ஆதார் கார்டு  உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதும் அதை அமல்படுத்துவதும் சாதாரண விஷயமல்ல.

அதிலும் விஜய் படம் என்றால் குடும்பத்துடன் வந்து பார்க்கவே நிறைய பேர் ஆசைப்படுவார்கள். வந்தவர்களில் ஒருவருக்கோ இருவருக்கோ நோய்த்தொற்று இருந்தால் கூட அது மற்றவர்களுக்கும் பரவிவிடும் பேராபத்து இருக்கிறது.  தமிழக அரசு தியேட்டர்களை திறக்க அனுமதிக்கும் போது, 150 திரைகளுக்கு மிகாமல் ரிலீஸ் செய்யும் படங்களை மட்டுமே திரையிட அனுமதிக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு இந்த திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் அதிக படங்கள்  வெளி வருவதற்கு வாய்ப்புகள் உருவாகும்.

இதன் மூலம் தயாரிப்பாளருக்கு ஏற்படும் வருமான இழப்பை சரி செய்ய மத்திய மாநில அரசுகள் விதிக்கும் 26 சதவீத ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரியை முழுமையாக மூன்று மாதங்களுக்கு ரத்து செய்து, கஷ்டத்திலும் நஷ்டத்திலும் இருக்கும் தமிழ் திரையுலகை காப்பாற்ற வேண்டும்.

எனவே மாண்புமிகு தமிழக முதல்வர், திரையரங்குகள் திறப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் போது, பொருளாதார சிக்கல்களை காட்டிலும் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.''  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular Producer Keyaar request to CM Edappadi K Palaniswami about Thalapathy Vijay's Master | மாஸ்டர் படம் குறித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத

People looking for online information on Edappadi K Palaniswami, Keyaar, Master, Vijay will find this news story useful.