பிரபல தயாரிப்பாளருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு அவரது இரு மகள்களுக்கும் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியாந நிலையில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. ஹாப்பி நியூ இயர், சென்னை எக்ஸ்பிரஸ் போன்ற பல வெற்றிப்படங்களை தயாரித்தவர் கரீம் மொரானி. இவரின் மூத்த மகளான ஷாசா சில வாரங்களுக்கு முன்பு மும்பையில் இருந்து ஸ்ரீலங்கா சென்று வந்துள்ளார். அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாத நிலையில் அவரின் இரண்டாவது மகளுக்கு நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டு உள்ளன. இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது, இருவருக்கும் நோய் தொற்று இருப்பது உறுதியானது.
மூத்த மகளுக்கு அறிகுறிகள் இல்லாத இருந்தது எப்படி? என்று மருத்துவர்கள் குழம்பி வந்தனர். இந்த நிலையில் அவர்களுது தந்தைக்கும் இந்நோய் பரவி இருப்பது திரைத்துறையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.