புகழ்பெற்ற சினிமா தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஸ்டீவ் பிங் தற்கொலை செய்துள்ளார். இந்த செய்தி ஹாலிவுட் பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 27 வது மாடியில் இருந்து குதித்து இந்த விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார்.
செய்திகளின் அடிப்படையில் அவர் கொரோனா நோய் காலத்தில் மிகவும் தனிமையில் இருந்ததாகவும். அதனால் மன அழுத்தத்தில் தற்கொலை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இன்னும் எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை. அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் நடிகை எலிசபெத் ஹர்லி என்பவரை திருமணம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மனஅழுத்தம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத் துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
Steve Bing Dies: Film Financier, Philanthropist & MAJOR CLINTON FOUNDATION DONOR, Jumped From Century City Building in Hollywood to his death. Why would this man with everything one could want commit suicide so suddenly? pic.twitter.com/IaQZWCL3Id
— Corruption Detector (@RedPill78) June 23, 2020