அழகர் சாமியின் குதிரை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற பல படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் தவசி. கிராமிய கதாபாத்திரங்களில் தனது நகைச்சுவையான நடிப்பிற்காக இவர் பிரபலம் அடைந்தவர். அதற்கு பின்பு சீரியல்களில் நடித்து வந்தார். இந்நிலையில் அவர் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு தற்போது வாடி வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சூரி 20 ஆயிரம் ரூபாய் வழங்கி உள்ளார். மேலும் முக்கியமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது நடிகர் தவசியை தனது மருத்துவமனையில் தங்க வைத்து இலவசமாக மருத்துவம் பார்த்து வருகிறார் திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ-வான சரவணன். அவரது இந்த மனித நேயமிக்க செயலைச் தொண்டர்களும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.