இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் தான் ஏமாற்றப்பட்டது குறித்து பகிர்ந்துள்ளார். அந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது பதிவில், ''நான் எனது சகோதரருக்கு ஃபிளிப்கார்ட் நிறுவனம் மூலம் பரிசாக ஆப்பிள் வாட்ச் அனுப்பியிருந்தேன். ஆனால் எங்களுக்கு வாட்ச்சிற்கு பதிலாக கற்கள் பேக் செய்யப்பட்டு அனுப்பப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம். இதுகுறித்து ஃபிளிப்கார்டில் புகார் தெரிவித்த போது, அவர்கள் எங்களுக்கு பணம் திருப்பி அனுப்ப மறுத்த விட்டனர்'' என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இதனையடுத்து அவருக்கு பதிலளித்த ஃபிளிப்கார்ட் நிறுவனம், ''மன்னித்துக்கொள்ளுங்கள். உங்கள் வருத்தம் புரிகிறது. கிழே லிங்க்கில் உங்கள் ஆர்டர் ஐடியை கொடுங்கள். நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறோம்'' என்று பதிலளித்துள்ளது.
I had sent an Apple Watch as a gift to my brother through @Flipkart And we were shocked when he received beautifully packed stones instead of the watch. When we raised the complain Flipkart, rejected our refund. Pls never buy from #Flipkart again. They’re cheats.#flipkartfraud pic.twitter.com/oGt2E6olph
— 𝐒𝐀𝐌 𝐂 𝐒 (@SamCSmusic) September 14, 2020