பிக்பாஸ் போட்டி குறித்து பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 90 நாட்களை நெருங்கி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் மீதம் இருக்கும் போட்டியாளர்கள் டைட்டிலை வெல்ல கடுமையாக போட்டி போட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் போட்டியில் நடிகர் ஆரிக்கும் பாலாஜிக்கும் கடுமையான மோதல் வெடித்துள்ளது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நேற்று பாலா மைக்கை கழட்டி எரிந்து ஆரியிடம் கோபப்பட்டார்.
இதையடுத்து பாலாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர் ரசிகர்கள். இதனிடையே இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ''ஆரியின் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால், நிச்சயம் தோல்வி கண்டிருப்பீர்கள்'' என பதிவிட்டுள்ளார்.
மேலும் ''பிக்பாஸ் போட்டியை அனைவரும் பார்க்கின்றனர். அப்படியானால், முதலில் பாலா வெளியே அனுப்பப்பட வேண்டும். இல்லை நிகழ்ச்சிக்கு ஏ சர்டிபிகேட் கொடுக்க வேண்டும். இதில் வாய் மொழியிலான வன்முறைகளுக்கு இடம் கொடுக்க கூடாது'' என அவர் காட்டமாக விமர்சித்துள்ளார்.