உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இப்பிழையில் இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி வரும் மே மாதம் 3 -ம் தேதி வரைக்கும் ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ துறையினர், காவல் துறையினர், ஊடகத்துறையினர் போன்ற வெகு சிலரே அன்றாடம் வெளியில் சென்று பணி செய்து வருகின்றனர். அதிலும் இப்போது மக்களின் உடல் நலத்துக்கு காவலர்களாக நிற்பவர்கள் தூய்மை பணியாளர்களே.
இந்நிலையில் நகரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடமாலை பகுதியில் நேற்று கொரோனா அறிகுறி ஒருவருக்கு தென்பட்டது. இதை அறிந்த சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக அங்கு சென்றார். நகராட்சியில் அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்க முடிவெமுத்தனர். அந்த பணியில் ஈடுபட தயக்கம் காட்டிய பணியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அதற்கான உடை அணிந்து கிருமி நாசினியை தெளிக்க ஆரம்பித்தார் சட்ட மன்ற உறுப்பினரான திருமதி.ரோஜா. அதன்பிறகு அவருடன் சேர்ந்து பணியாளர்களும் ஊர் முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர்.