மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரரும் நடிகருமான நாக பாபுவின் மகள் நிஹரிகா கொனிடேலா. இவர் தமிழில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்த 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இவர் பிரபல தெலுங்கு ஹீரோ வருண் தேஜின் சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வருங்கால கணவர் சைதன்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்து வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அவை வைரலாகி வருகிறது.
நிஹாரிகா திருமணம் செய்து கொள்ளவிருக்கும் சைதன்யா டெக் மஹிந்திராவில் பணி செய்து வருகிறாராம். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது.