சமீப காலமாகவே இந்திய சினிமாவில் துக்க நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. கலைஞர்கள் பலரும் ஒன்றன்பின் ஒன்றாக மரித்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அந்த வகையில் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்போது மரணமடைந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறப்புக்கான காரணம் வெளிவராத நிலையில், விசாரணை நடைப்பெற்று வருகிறது.
இந்த நிலையில் எம்.எஸ்.தோனி படத்தில் அவருடன் பணியாற்றிய சிகை ஒப்பனையாளர் சப்னா பவானி தற்போது ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் "கடந்த சில வருடங்களாகவே அவர் கடினமான பாதையில் தான் பயணித்தார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. சினிமா உலகில் இருக்கும் யாரும் அவருக்கு உதவிக்கரம் நீட்ட வில்லை. இன்று அவரைப் பற்றி பதிவிடுவது சினிமாத்துறை எவ்வளவு ஆழமற்றது என்பதற்கு ஒரு சான்று. இங்கு யாரும் உனக்கு நண்பர் இல்லை. உன் ஆன்மா சாந்தி அடையட்டும்" என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.