பிரபல சினிமா நட்சத்திரம் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1980 முதல் குஜராத்தி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நரேஷ் கனோடியா. இவர் நடித்த பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. குஜராத் சினிமாவில் அமிதாப் பச்சன் என புகழப்படும் இவர், பாஜகவில் தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வந்தார்.
இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தாக்குதலால், இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை இவர் சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளது தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து பிரதமர் மோடி தனது இரங்கலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் குஜராஜ் முதலமைச்சர் விஜய் ருபாணி மற்றும் பல்வேறு திரைத்துறையினரும் நரேஷ் கனோடியாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
In a span of two days, we have lost both Maheshbhai and Nareshbhai Kanodia. Their contributions to the world of culture, especially popularising Gujarati songs, music and theatre will never be forgotten. They also worked hard to serve society and empower the downtrodden. pic.twitter.com/Ri4GzOO5zo
— Narendra Modi (@narendramodi) October 27, 2020