பிரபல முன்னாள் ஆபாச பட நடிகை மியா கலிஃபா தன் 2வது கணவர் ராபர்ட் சாண்ட்பர்க்கை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2020-ஆம் வருடம் ஜூன் மாதம் தான் ஊரடங்கில் எளிமையாக, இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. சமீபத்தில் விவசாயிகள் பிரச்சனையில் கூட கருத்து தெரிவிக்கும் அளவுக்கு சமூக பிரச்சனைகளிலும், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்தார்.
இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள மியா கலிஃபா, “கடந்த ஒரு வருடத்துக்கும் மேல், எங்கள் திருமண உறவை தக்க வைக்க, நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. எனவே நாங்கள் இருவருமே திருமண உறவை முறித்துக்கொள்கிறோம்.
ஆனால் எங்களுக்குள் இருக்கும் நட்பு தொடரும். இது மிகவும் கஷ்டமான முடிவுதான். ஆனால் வேறு வழி இல்லை. ஒரு போலியான ரிலேஷன்ஷிப்பை இருவருமே தொடர முடியாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
திருமணம் ஆகி ஓராண்டிலேயே மியா கலிஃபாவின் இந்தத் திருமணம் முடிவுக்கு வந்திருப்பது மியா கலிஃபாவின் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.