பிரபல பாடகி காலமாகியிருப்பதை அடுத்து., அம்மாநில முதல்வர் இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.
அஸ்ஸாம் மொழியில் நாட்டுபுற பாடல்களின் மூலம் பிரபலமானவர் அர்ச்சனா மஹாந்தா. இவர் தனது கணவர் காஜென் மஹாந்தாவுடன் இணைந்து பல பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தார். இதனிடையே கடந்த 14-ஆம் தேதி, அர்ச்சனா மஹாந்தா மூளை பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி காலாமாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது. அர்ச்சனா மஹாந்தாவின் இழப்பு., அஸ்ஸாம் இசைத்துறைக்கு பெரும் இழப்பு என ரசிகர்கள் வருத்தத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அஸ்ஸாம் முதலமைச்சர் Sarbananda Sonowal தனது ட்விட்டர் பக்கத்தில் மறைந்த பாடகி அர்ச்சனா மஹாந்தாவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
Anguished at the demise of renowned Assamese folk singer Archana Mahanta baidew. Today, we have lost a shining star among the cultural stalwarts of the state. I offer my deepest condolences and join all her well-wishers and fans in prayers for the departed soul.@paponmusic pic.twitter.com/iMLl0CCe7e
— Sarbananda Sonowal (@sarbanandsonwal) August 27, 2020