உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க கடுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு, தற்போதுதான் சிறிய தளர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பல துக்க செய்திகளும், கலைஞர்களின் மரணங்களும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பல கலைஞர்கள் அடுத்தடுத்த மரணித்து வருவது ரசிகர்களை சோகத்தில்ஆழ்த்தியுள்ளது.
தற்போது தெலுங்கு திரைப்பட மற்றும் டிவி கலைஞர் கோசூரி வேணுகோபால், கடந்த 23-ஆம் தேதி கொரோனா வைரஸ் காரணமாக மரணம் அடைந்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி, கொரோனா காரணமா மருத்துவமனையில் கிட்டத்தட்ட 22 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர், உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலியின் மரியதா ராமண்ணா, பில்லா ஜமீன்தார் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.