கொரோனா வைரஸில் இருந்து மீண்டுவந்த பிரபல இயக்குநரின் மகன்- ''எங்கள் மாநிலம் தான் நம்பர் 1'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழகத்தில் நேற்று (ஏப்ரல் 8)  கொரோனாவினால் 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அறிவித்தார்.  இதனையடுத்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது.

ஆங்காங்கே ஒரு சிலர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுவரும் செய்திகள் வெளியாகி மக்களுக்கு நம்பிக்கை அளித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக 'கேரளா கஃபே', 'பாலிடெக்னிக்', 'ஜோசஃப்', 'மாமாங்கம்' படங்களின் இயக்குநர் பத்மகுமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது மகன் கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமாகியுள்ளதாக மகிழச்சியான செய்தியை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, எனது மகன் ஆகாஷ் மற்றும் அவருடன் பணிபுரியும் எல்தோ மேத்தியூவும் கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள், நர்ஸ்கள், மற்ற அனைத்து சுகாதாரத்துறை பணியாளர்கள், ஒட்டுமொத்த குழுவின் கேப்டனான ஸ்ரீ பினராயி விஜயன், சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சர் அனைவருக்கும் மிக்க நன்றி.

இது வெறும் நன்றி தெரிவிக்கும் பதிவு மட்டுமல்ல, என்னுடைய மாநிலத்தின் பெருமையை தெரிவிக்கும் பதிவு. உலகத்தில் மக்கள் மீது கவனம் கொள்வதில் எங்கள் அரசு நம்பர் 1'' என்று தெரிவித்துள்ளார்.

 

Entertainment sub editor

Popular director's son cured from Coronavirus Mamangam | பிரபல இயக்குநரின் மகள் கொரோனா வைரஸில் இருந்து முற்றிலும் குணமடைந்தார

People looking for online information on Coronavirus, Covid-19, Kerala, M. Padmakumar, Mamangam will find this news story useful.