உலக திரைப்பட ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இசையமைப்பாளர் எனியோ மரிகோன் (Ennio Morricone). இவர் சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். குயின்டின் டரான்டினோவின் 'The Hateful Eight' என்ற படத்துக்காக அவர் ஆஸ்கர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது இசையில் The Good, the Bad, The ugly, Cinema Paradiso, The Untouchables, Melana உள்ளிட்ட படங்கள் மிகவும் புகழ்பெற்றவை. அவரது மறைவு உலக அளவில் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பிரபல இயக்குநர் சிம்பு தேவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''இளையராஜா சாருக்கு பின் நான் மிக நேசித்த இசைமேதை எனியோ மரிகோன். அவர் தனது 91 வயதில் நம்மை விட்டு பிரிந்து விட்டார். Cowboy இசையை நமக்கு அளித்தவர். எனது 'இரும்புக்கோட்டை' படத்தில் அவரது பாதிப்பு இருக்கும். 1961 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வெளியான 'The Hateful Eight' படம் வரையிலான அவரது பயணம் மறக்கமுடியாதது. ஆழ்ந்த இரங்கல்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
இளையராஜா சாருக்கு பின் நான் மிக நேசித்த இசைமேதை எனியோ மரிகோன். He left us today(91) Especially he defined the identity of the cowboy music. My "Irumbukottai " also had his influence. His journey from 1961 to ‘the hateful eight’(2015) was remarkable! Love from our heart,sir. RIP pic.twitter.com/eDvgQhoWdJ
— Chimbu Deven (@chimbu_deven) July 6, 2020