சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் ஜோதிகா முதன்மை வேடத்தில் நடித்து உருவாகியுள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. இந்த படம் நாளை (29/05/2020) முதல் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த படத்தில் ஜோதிகாவுடன் பிரபல இயக்குநர்கள் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை ஜேஜே ஃபெட்ரிக் எழுதி இயக்கியுள்ளார்.
இந்த படத்தை பாராட்டி பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பிரபல இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ''அறியாத வயதில் காமத்தை சுமந்து,வெளியில் சொல்லா முடியா வாழும்,பெண்களுக்காக வந்திருக்கிறாள் இந்த பொன்மகள். இது பெண்களுக்கான படம் அல்ல,பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கான இது ஒரு பாடம்.. இயக்குனரின் இயக்கமும், ஜோதிகா அவர்களின் உணர்ச்சி் சார்ந்த நடிப்பின் இறுதிக்காட்சிகள்'' என்று புகழாரம் தெரிவித்துள்ளார்.
அரியாத வயதில் காமத்தை சுமந்து,வெளியில் சொல்லா முடியா வாழும்,பெண்களுக்காக வந்திருக்கிறாள் இந்த பொன்மகள். இது பெண்களுக்கான படம் அல்ல,பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கான இது ஒரு பாடம்.. இயக்குனரின் இயக்கமும்,ஜோதிகா அவர்களின் உணர்ச்சி் சார்ந்த நடிப்பின் இறுதிக்காட்சிகள்
— Bharathiraja (@offBharathiraja) May 28, 2020