கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர பிற நடவடிக்கைகளுக்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வணிகம் சார்ந்த செயல்பாடுகள் முற்றிலும் தடைபட்டுள்ளதால் அது சார்ந்த பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக திரைப்படங்களில் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தினசரி ஊதியம் பெறும் ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து திரைப்பட பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பல்வேறு திரைப்பட சங்கங்கள் மூலம் உதவி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நடிகர் ரஜினிகாந்த சமீபத்தில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சஙகத்திற்கு அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளாராம். இதுகுறித்து தமிழ்நாடு திரைப்பட சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரஜினிகாந்த்திற்கு நன்றி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ள இயக்குநர் பேரரசு தனது ட்விட்டர் பக்கத்தில் , ''ரஜினி சாரின் கட்டளையை மீறிவிட்டோம். இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசிமூட்டை, மளிகைப் பொருட்கள் வழங்கும் போது "பத்திரிகைகளை அழைக்கவோ, செய்தி கொடுக்கவோ வேண்டாம் "என்ற நிபந்தனையோடுதான் கொடுத்தார். அது அவரின் பெருந்தன்மையாக இருக்கலாம். பெற்ற உதவியை நாங்கள் எப்படி சொல்லாதிருப்பது!'' என்று தெரிவித்துள்ளார்.
ரஜினி சாரின் கட்டளையை மீறிவிட்டோம்!
இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசிமூட்டை,மளிகைப் பொருட்கள் வழங்கும் போது "பத்திரிகைகளை அழைக்கவோ, செய்தி கொடுக்கவோ வேண்டாம் "என்ற நிபந்தனையோடுதான் கொடுத்தார்.
அது அவரின் பெருந்தன்மையாக இருக்கலாம்
பெற்ற உதவியை நாங்கள் எப்படி சொல்லாதிருப்பது! pic.twitter.com/iGxCBF6F62
— PERARASU ARASU (@ARASUPERARASU) April 23, 2020