சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் 'அய்யப்பனும் கோஷியும்'. இந்த படத்தில் நடிகர் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இந்நிலையில் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய வேலைகள் நடந்து வருகிறது.
இந்த படத்தை இயக்குனர் சச்சி இயக்கியிருந்தார். எழுத்தாளராக ரன் பேபி ரன், அனார்கலி, ராமலீலா, டிரைவிங் லைசென்ஸ் போன்ற படங்களுக்கு எழுதியுள்ளார். மேலும் அனார்கலி, அய்யப்பனும் கோஷியும் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகி உள்ளது. அவருக்கு 15-ஆம் தேதி இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.
மாரடைப்பு காரணமாக அதி தீவிர நிலையில் திருச்சூரில் உள்ள ஜூப்ளி மிஷன் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையத்தில் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்துள்ளார். இந்த செய்தி திரைத்துறையினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Shocked to hear the sudden demise of Sachy ettan. Indeed a big loss to Malayalam cinema. May his soul rest in peace! pic.twitter.com/sWy7Au3O6V
— Nivin Pauly (@NivinOfficial) June 18, 2020