உலகம் முழுவதும் குரல் நோய் வேகமாக பரவி வருகிறது இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30-ஆம் தேதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது இதனையடுத்து மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றன இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பிரபலங்களுக்கும் இதே நிலைமை தான். வருமானமின்றி வாடிய சூழ்நிலையில் சினிமா இயக்குனர் ஆனந்த் தற்போது மளிகைக்கடை திறந்துள்ளார்
இவர் ஒரு மழை நான்கு சாரல், மௌன மழை, பாரதிபுரம், நானும் ஒரு பேய் தான், துணிந்து செய் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். கொரனோ ஊரடங்குக்கு முன்பு அவர் தனது துணிந்து செய் பட வேலைகளில் இருந்தார். இந்நிலையில் மூன்று மாதமாக வருமானம் இல்லாமல் தவித்து வந்தவர் கையில் இருந்த பணத்தை வைத்து இந்த மளிகை கடையை திறந்து உள்ளார். மேலும் அவர் கூறுகையில் " விலை பட்டியல் வைத்து வியாபாரம் செய்கிறேன். கொரோனா கஷ்டத்தில் மக்களுக்கு ஒரு சேவையாக தான் இந்த தொழில் செய்கிறேன். ஊரடங்கு முடிந்த பிறகு இதை விட்டு விட மாட்டேன். வேறு யாரையாவது வைத்து இதை தொடர்வேன்" என்று கூறியுள்ளார்.