திரைப்படங்களை போலவே டிவி சீரியல்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான டிவி நடிகர், நடிகைகளுக்கு ஃபேன் பேஜ் தொடங்கி கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர்களின் மனம் கவர்ந்த ஜோடியான ராஜ்கமல், லதா ராவ் ஜோடி தங்களின் காதல் தருணங்கள், திருமணத்தின் போது நடைபெற்ற குட்டி கலாட்டாக்கள், திருமணத்துக்கு பிறகு இருக்கும் காதல் உள்ளிட்டவைகள் குறித்து Behindwoods TV-க்கு பிரத்யேகமாக பேட்டியளித்தனர்.
அப்போது பேசிய ராஜ்கமல், ''நான் தான் அடிக்கடி தப்பு பண்ணி மாட்டிக்குவேன். கேர்ள் ஃபிரெண்டுக்கு மெசெஜ் அனுப்பி டெலிட் பண்ணாம விட்ருவேன். அதனை அவங்க பார்த்துருவாங்க'' என்றார். இந்த இண்டர்வியூ முழுவதும் இருவரும் மிகவும் ஜாலியாக உரையாடினர். அதில் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள காதல் தெரிந்தது