உலகம் முழுதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருவது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க இவ்வளவு நாள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு. தற்போது சிறிது தளர்வு ஏற்பட்டு உள்ளது. மன அழுத்தம் தரும் இந்த காலத்தில் சில செய்திகள் மட்டுமே மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது. அப்படி ஒரு செய்திதான் இது.
விஜய் டிவி நடத்தும் பிரபல வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளரும், சீரியல் நடிகருமான சாய்சக்தி தற்போது திருமணம் முடித்துள்ளார். இவர் மும்பையை சேர்ந்த ஃபத்துல் ஃபாத்திமா என்பவரை தற்போது திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சாய் சக்திக்கு நெருக்கமான குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கு கொண்டனர். அவருக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.