உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க கடுமையான ஊரடங்கு கண்டுபிடிக்கப்பட்டது, தற்போது சற்று தளர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபலங்களும் இந்த நேரத்தில் தங்கள் திருமண நிகழ்வை அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் பிரபல சர்ச்சை நடிகை மற்றும் மாடலான பூனம் பாண்டே தற்போது திருமணம் செய்துள்ளார். 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்றால் நிர்வாணமாக நடப்பேன் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர். இந்நிலையில் அவர் தனது நீண்ட கால காதலரான சாம் பாம்பே என்பவரை தற்போது திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ரகசியமாக திருமணம் முடித்துள்ளனர். இந்நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.