உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். நேற்றைய தினம் பேசிய பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பல பிரபலங்களுக்கும் இந்நோய் பரவி வருகிறது. அவ்வகையில் இந்தியாவை சேர்ந்த பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கும் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர் லண்டன் சென்று திரும்பிய பிறகு நடந்த பிரமாண்ட பார்ட்டியில் கலந்து கொண்டிருந்தார். அந்த பார்ட்டியில் அவரோடு இருந்தவர்கள் பலருக்கும் கொரோனா தொற்று 'இல்லை' என்று கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப கொரோனா டெஸ்டில் 'நெகட்டிவ்' வர வேண்டும். ஆனால் மூன்றாவது முறையாக செய்த போதும் அவருக்கு பாசிடிவ் என்ற முடிவு வந்திருப்பதால். அவர் மீண்டும் சிகிச்சைக்கு உள்ளாக்கப்படுவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் நான்காவது முறையும் அவருக்கு பாசிட்டிவ் என்ற முடிவே வந்துள்ளது.
இந்நிலையில் அவரது உடல் கொரோனா சிகிச்சைக்கு ஒத்துழைக்க வில்லை என்று உறவினார்கள் மற்றும் மருத்துவமனை வட்டாரம் கூறுவதாக வடமாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.