கொரோனா நோய் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மக்கள் அனைவரும் வீட்டில் அடைந்து உள்ளனர். வேலை செய்பவர்களும் வீட்டிலிருந்தே வேலை செய்கின்றனர். இந்த நிலையில் நடுத்தர மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் மிகுந்த இந்த கடினமான சூழல் உருவாகியிருக்கிறது.
சினிமா தொழிலா தொழிலாளர்கள் சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சியில் தலைவர் ஆர்கே செல்வமணி சமீபத்தில் நடிகர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். அதில் சினிமா தொழிலாளர்கள் பலர் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் வேதனைப்படுகிறார்கள் என்றும், நடிகர்கள் தாமாக முன்வந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து பல ஊழியர்கள் எடுத்து பல நடிகர்களும் இலட்சக்கணக்கில் பணமும் அரிசியும் பெப்ஸி சங்கத்திற்கு அளித்து வருகின்றனர்.
அதேபோல் பலர் பொதுமக்களுக்கும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஆர்த்தி. இவர் பல படங்களில் நடித்து தனது நகைச்சுவையால் ஜனங்களை கட்டிப்போட்டவர். தற்போது கொரோனா காரணமாக மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். அதுவும் தாமே தன் கணவருடன் சேர்ந்து போய் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். இந்த செயல் மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது.