கடந்த பிக்பாஸில் பங்கு கொண்டவர் செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா. அந்நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன் பிறகு நடிகையாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் லாஸ்லியாவின் தந்தை நேற்றைய தினம் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி வெளியாகியுள்ளது.
இதுபற்றி நடிகை வனிதா தற்போது ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது "அனைத்து லாஸ்லியா ரசிகர்களுக்கும், நான் அவரிடம் இப்பொழுதுதான் பேசினேன். அவர் சுக்குநூறாக உடைந்து உள்ளா.ர் அழுது கொண்டே இருக்கிறார். ஆனால் அவர் தைரியமாக இருப்பார் என்று நம்புகிறேன். அவர் விமானம் மூலம் ஸ்ரீலங்கா செல்ல, எம்பஸி மூலம் பேசி வருகிறார்கள். விஜய் டிவி டீம் அவருடன் இருக்கிறது. கொரோனா சூழ்நிலையில் அவரது உடல் உடனடியாக ஸ்ரீலங்கா கொண்டு வர முடியவில்லை" என்று கூறியுள்ளார்.
To all #Losliya fans ...I spoke to her she is devastated and crying..but she will be strong she's trying to fly to srilanka.arranging thru embassy @vijaytelevision team is with her.due to covid pandemic the body can't reach srilanka immediately.ive given her my love and blessings https://t.co/nWMvNV9Xms
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 16, 2020