உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருகின்றனர். பிரபலங்களுக்கும் இதே நிலைமைதான்.
ஆனால் இந்த நேரத்தை சிலர் உபயோகரமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் பதினாறு, நோட்டா, ஜாம்பி போன்ற படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி சீசன் 10-ல் நடுவராக பங்கேற்றார். இந்நிலையில் இந்த லாக்டவுன் நேரத்தில் அவர் உடற்பயிற்சியை மிகவும் சீரியசாக எடுத்து 3 மாதங்களில் தனது உடற்கட்டை கட்சிதமாக மாற்றியுள்ளார். அந்த புகைப்படத்தை அவர் வெளியிட ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகி உள்ளனர். விடாமுயற்சியால் எதுவும் சாத்தியம் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.