பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். அதன்பிறகு அவரை தேடி பல வாய்ப்புகள் வந்தன. தேடி வந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர், இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார், சமீபத்தில் அவர் நடித்த 'தாராள பிரபு' படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வரும் வேளையில், படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் ஒரு புகைப்படம் வெளியிட்டு உள்ளார். காலியான சாலைகளில் முகத்தில் மாஸ்க் அணிந்து அவர் நடந்து செல்லும் புகைப்படத்தை வெளியிட்டு, "எப்படி இருந்ததோ அப்படியே தான் இருக்கிறது. அதனால் தான் அதை சந்திக்க தயாராகி விட்டேன்" என்று தலைப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.