பிரபல நடிகர் காலமான தகவல் தெரிய வந்துள்ள நிலையில், திரைத்துறையினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பெங்கால் மொழியில் புகழ்ப்பெற்ற நடிகராக அறியப்படுபவர் சௌமித்ர சட்டர்ஜி. உலக அளவில் பேசப்பட்ட சத்யஜித் ரேவின் படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். மேலும் இந்திய அளவில் உயரிய விருதுகளான தேசிய விருது, தாதா சாகேப் பால்கே விருது ஆகியவற்றையும் இவர் பெற்றுள்ளார்.
இந்நிலையில் தற்போது நடிகர் சௌமித்ர சட்டர்ஜி காலமாகியுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி கொரோனா வைரஸ் பாசிட்டீவ் காரணமாக மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து இவர் ஒரு மாதகாலமாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து பல்வேறு திரைத்துறையினர் தொடங்கி, ரசிகர்கள் வரை சௌமித்ர சட்டர்ஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
We are deeply saddened by the demise of renowned Bengali actor Soumitra Chatterjee. Known for his elegance & versatility, he acted in noted films like Apur Sansar, Kshudista Pashan, Akash Kusum and Charulata. May his soul rest in peace.#SoumitraChatterjee pic.twitter.com/3hvNZPD7mZ
— NFAI (@NFAIOfficial) November 15, 2020