சினிமாவிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி, தைரியமான பெண்ணாக திகழ்கிறார் நடிகை வரலக்ஷ்மி. நடிகர் சரத்குமாரின் மகளான இவர் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் பழக்கம் கொண்டவர். இதற்காகவே இவருக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த கொரோனா நேரத்திலும் வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு, அவர் தனது குழந்தை பருவ புகைப்படத்தை வெளியிட்டு தனது தாய்க்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் தெரிவித்தார். அவரது தாய் இளவயதில் பார்க்க நடிகை வரலக்ஷ்மி போலவே இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் இது பற்றி கூறிய அவர் "பலரும் என்னிடம் கேட்கும் கேள்வி இத்தனை தைரியம் எங்கிருந்து வந்தது என்று. அதற்கு பதில் என் தாயிடம் இருந்து தான். தனி ஆளாக எங்களை வளர்த்தார். அவர் ஒரு புலி. அந்த கடினமான சூழ்நிலையிலும் உதவி கேட்டு வருபவர்களுக்கும், விலங்குகளுக்கும் மறுக்காமல் உதவி செய்யும் மனம் படைத்தவர். லவ் யூ மம்மி" என்று உணர்ச்சிபூர்வமாக கூறியுள்ளார்.