www.garudavega.com

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் நடிகை.. விஜய் டிவியின் லேட்டஸ்ட் புரோமோ பார்த்தீர்களா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 விரைவில் தொடங்க உள்ளது.  கமல்ஹாசன் நடித்த இரண்டு ப்ரோமோ வீடியோ காட்சிகள் விஜய் டிவியில் வெளியான நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த சீசனுக்கு யார் போட்டியாளர்களாக இருப்பார்கள் என்பதுதான் அடுத்த கேள்வி. இந்த சீசனில் ஷாலு ஷாமு, ரியோ ராஜ், சஞ்சனா சிங், ஷிவானி நாராயணன் போன்ற போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.

Popular actress to join biggboss tamil ft ramya pandiyanபிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் பிரபல நடிகை

மேலும் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஒரு பிரபல ஓட்டலில் தனிமைப்படுத்தப் பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா என்கிற சந்தேகம் பலருக்கும் இருந்தது.

இந்நிலையில் இதை உறுதியாக்கும் வகையில் கலக்கப் போவது யாரு புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 5 நடுவர்களில் ரம்யா பாண்டியனுக்கு பதிலாக தற்போது ரோபோ சங்கர் அதில் இணைந்துள்ளார். இதைப் பார்த்ததும் ரசிகர்கள் ரம்யா வருவது கன்பார்ம் என்று கனவு காண துவங்கி விட்டார்கள். வேறு யாரெல்லாம் வர போகிறாங்களோ..!

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் நடிகை.. விஜய் டிவியின் லேட்டஸ்ட் புரோமோ பார்த்தீர்களா..? வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular actress to join biggboss tamil ft ramya pandiyanபிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் பிரபல நடிகை

People looking for online information on Biggboss, Ramya Pandiyan, Vijay tv will find this news story useful.