கொரோனா வைரஸ் மக்களின் இயல்பு வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது. நோயின் தாக்கம் ஒருபுறம் இருக்க, நடைமுறையில் இருக்கும் ஊரடங்கினால் வணிகம் சார்ந்த செயல்பாடுகள் முடங்கியுள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதித்துள்ளது.
இதனையடுத்து அரசு பல்வேறு வழிமுறைகளில் மக்களுக்கு உதவி வருகிறது. மேலும் பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். இதுகுறித்த செய்திகள் அடிக்கடி வைரலாகி வருகிறது.
அந்த வகையில் பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் அனிஸ்டோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா நிவாரணநிதிக்காக என்னுடைய புகைப்படங்களை ஏலம் விடுக்கவுள்ளேன். அதில் கிடைக்கும் முழு தொகையும் கொரோனா நிவாரண நிதியாக அளிக்கவுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.