'டார்லிங்', 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்', 'ஹர ஹர மகாதேவகி' உள்ளிட்ட பல தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளவர் நிக்கி கல்ரானி. இவர் தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், கன்னடம், உள்ளிட்ட மொழிகளிலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். மேலும் அவர் தனக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு அனுபவங்கள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அதில், ''எனக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. நல்லவேளை எனக்கு லேசான அறிகுறிகள் தான் இருந்தது. முறையான வழிமுறைகளை கடைபிடித்து உடல் நலம் தேறிவருகிறேன்.
இந்த அசாதாரண சூழ்நிலையில் நாம் பாதுகாப்பாக இருப்பது முக்கியம். எனது வயது, உடல் ஆரோக்கியத்தால் என்னால் இதனை எதிர்கொள்ள முடியும். ஆனால், பெற்றோர், வயதானவர்கள் நிலை எனக்கு கவலையளித்தது. அதனால் தயவு செய்து மாஸ்க் அணிந்து வெளியில் செல்லுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்.
தயவு செய்து அவசிய தேவை தவிர மற்றவற்றிற்கு வெளியில் செல்வதை தவிருங்கள். வீட்டிலேயே இருப்பது கடினமான ஒன்று தான். இந்த கடினமான நேரத்தில் நாம் வீட்டிலேயே இருப்பது நமது கடமை. தொடர்ந்து ஆதரவளித்தமைக்கு சென்னை மாநகராட்சிக்கு நன்றி'' என்று குறிப்பிட்டுள்ளார்.