தமிழ் சினிமாவின் கனவு கன்னியாய் எண்ணற்ற இளைஞர்களின் தூக்கத்தை கலைத்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. 80-ஸ், 90-ஸ் கிட்ஸ்களிடம் "உங்கள் கனவு கன்னி யார்?" என்று என்று கேட்டால், பட்டென்று இவரது பெயரை சொல்வார்கள். எவரையும் மயக்கக் கூடிய அந்த காந்த கண்கள் தான் இவரது ப்ளஸ். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மொத்தம் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அச்சு அசலாக சில்க் ஸ்மிதா போன்றே இருக்கும் பெண்ணொருவரின் வீடியோக்கள் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. அவரின் டிக்டாக் விடீயோக்களுக்கு மில்லியன் கணக்கில் பார்வைகள் குவிந்த வருகிறது. இவரைப் பற்றிய தெளிவான விவரங்கள் எதுவும் தெரியாத நிலையில். சில்க் மறுபிறவி எடுத்திருந்தால் இப்படித்தான் இருப்பார் என்று தோன்றும் அளவிற்கு இருக்கும் இவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை எகிறிக் கொண்டே போகிறது குறிப்பிடத்தக்கது.
Watch on TikTok