வேலை காரணமாக அவசர கதியில் ஓடிக்கொண்டிருந்த மக்களை இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு தங்களின் ஆரோக்கியம் குறித்து சிந்திக்க வைத்துள்ளது. பலரும் தங்களின் உடல் நலம் குறித்து கவனம் செலுத்தி வருகின்றனர்.
பிரலங்கள் பலரும் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஊக்கம் அளித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகை வித்யூ ராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது டிரான்ஸ்ஃபர்மேஷன் ஃபோட்டோவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ''நான் அதிக எடையில் இருக்கும் போது எல்லோருமே உங்கள் தன்னம்பிக்கை எப்படி இருக்கிறது என்று கேட்பர். ஆனால் நான் இன்று உண்மையில் தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன். என் வாழ்க்கை முறையையும் பொழுதுபோக்குகளையும் மாற்றினேன்.
நீங்கள் மனதார ஒன்றை நினைத்தால் நிச்சயம் அது சாத்தியமாகும் என்பது புரிந்தது. வாரத்தில் 6 முறை உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடித்தல் என செய்துவந்தேன். இது உண்மையான கடின உழைப்பு. வாழ்க்கையில் எதுவும் இலகுவாக கிடைக்காது. வேர்வையாலும் அழுகையாலும் சாத்தியமாகும். கடந்த 20/06/2020ல் எனது எடை 68 கிலோ'' என்று தெரிவித்தார்.