உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இதன் பரவலை தடுக்க ஒரே வழி சமூக இடைவெளியை கடைபிடிப்பது தான் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். ஆனால் இந்த சூழ்நிலை ஏழை எளிய மக்களுக்கு மிகுந்த அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
அப்படிப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்காக பிரபல நடிகை வரலட்சுமி தனது தாயாருடன் இணைந்து சமூக சேவையில் இறங்கியுள்ளார். ஆரம்பம் முதலே பல உதவிகளை செய்து வரும் அவர் தற்போது ரயில்களில் பயணப்படுபவர்களுக்கு ரொட்டி பாக்கெட்டுகளை வழங்கி வருகிறார். அந்த வீடியோவை தற்போது அவர் வெளியிட்டுள்ளார்.
பிற ஊர்களில் இருந்து வரும் ரயில்கள் சென்னையில் 30 நிமிடம் நிறுத்தப்படுகிறது. 20 பெட்டிகளில் தலா ஒரு பெட்டிக்கு எண்பது பேர் என இருக்கக்கூடியவர்களுக்கு ரொட்டி பாக்கெட்டுகளை தனது தாயாருடன் சேர்ந்து அவர் அளிக்கிறார். கொரோனா நேரத்தில் பலரும் தங்கள் வீடுகளை விட்டே வெளியேற பயப்படும் வேளையில் முகத்தில் மாஸ்க் அணிந்து சமூக சேவையில் இறங்கியிருக்கும் நடிகையை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.