விஜய் சேதுபதி - கௌதம் கார்த்திக் இணைந்து நடித்த 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நிஹரிகா கொனிடேலா. இவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபுவின் மகள்.
நிஹரிகா கொனிடேலா என்பவருக்கும் சைதன்யா என்பவருக்கும் கடந்த வெள்ளிக்கிழமை கோலகலமாக நிச்சயார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்த நிகழ்வில், அல்லு அர்ஜூன், ராம் சரண் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பசுப்பு என்ற அவர்களது திருமண சடங்கு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.