பிரபல நடிகை பூர்ணா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிகையும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் விஜய் இயக்கி வரும் தலைவி படத்தில் சசிக்கலா வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
திரைப்படங்கள் மற்றும் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டுவருகிறார். அவருடைய திருமணத்துக்காக அவருடைய குடும்பத்தினர் வரன் பார்த்த போது, மாப்பிள்ளை வீட்டார் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட 6 பேர் முகவரி உள்ளிட்ட பொய்யான தகவல்களை அளித்திருந்ததாகவும் அதனை வைத்து அவர்ள் போலியானவர்கள் என்று தெரிந்து கொண்டு போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
அதன் பிறகே அந்த கும்பல் நிறைய பெண்களை ஏமாற்றியது தெரியவந்ததுள்ளது. இந்த விவகாரம் குறித்து Behindwoods TV-க்கு பிரத்யேகமாக பேசிய அவர், ''சினிமா என்பது ஃபேண்டஸி. சினிமாவில் நடிக்க வைப்பதாக பெண்களிடம் நிறைய பேர் பேசுகிறார்கள். சினிமா ஷூட்டிங், விளம்பர ஷூட்டிங் என்று பெண்களை அழைத்து வந்து 8 நாள், 10 நாள் ரூமில் போட்டு அடைத்து வைக்கிறார்கள்.
அதனால் பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் உங்கள் குடும்பத்தாருடன் இதுகுறித்து பேசுங்கள். எந்த ஒரு முடிவு எடுக்கும்போது, குடும்பத்தினருடனும், பெரியவர்களிடமும் விவாதியுங்கள்'' என்று தெரிவித்தார்.