ஸ்டார் விஜய் சேனலில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவருக்கும் விவாகரத்து கொடுக்கப்பட்டுவிட்டது.
எனினும் குழந்தைகள் விருப்பப்பட்டால் பாரதியை பார்க்க அனுமதி கொடுக்கப்பட்டுவிட்டது. பாரதியும் கண்ணம்மாவையும் குழந்தைகளையும் மனமாற்றம் செய்ய, அவர்களின் ஊருக்கு சென்றுவிட்டார். கிராமத்தில் நடக்கும் தற்போதைய எபிசோடுகளில் பாரதி கண்ணம்மாவை பல வழிகளில் சந்தித்தும் பேசியும் சமாதானம் பண்ணியும் வருகிறார். அதன் ஒரு அங்கமாக அந்த ஏரியா மக்களிடையே நட்பாக பழகி அவர்களுக்கு மருத்துவம் பார்ப்பது மருத்துவ முகாம் போடுவது உள்ளிட்டவற்றின் மூலம் கண்ணம்மாவை சந்திப்பதற்கும் பேசுவதற்குமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கிறார் பாரதி.
இதனிடையே லட்சுமி பாரதிக்கு தன்னுடைய ஆதரவுக் கரத்தை நீட்டி விட்டார். இதனால் பாரதி டபுள் மடங்கு எனர்ஜியுடன் கண்ணம்மாவை அவ்வப்போது காதலாக வம்பிழுத்து வருகிறார். இந்த நிலையில்தான் திடீரென கண்ணம்மாவின் அம்மாவுக்கு திதி கொடுக்க வேண்டும் என்று பாரதி மற்றும் அந்த ஊரில் இருக்கும் அவரது நண்பன் அனைவரையும் ஏற்பாடு செய்து ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். அதன்படி பாரதியின் மாமியாரும் கண்ணம்மாவின் அம்மாவுமான பார்வதி என்பவருக்கு திருவுருவ புகைப்படத்தை திறந்துவைத்து அஞ்சலி செலுத்துகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக ஆற்றங்கரையில் தர்ப்பணம் கொடுக்கிறார்கள். இதில் கண்ணமாகவும் அவருடைய அப்பாவும் கலந்து கொள்ள வேண்டும் என்று அழுத்தம் தர, பிக்பாஸ் தாமரைச்செல்வியும் தன் பங்குக்கு கண்ணம்மாவிடம் எடுத்துரைக்க ஒரு வழியாக கண்ணம்மாவும் பாரதியும் சேர்ந்தே தர்ப்பணம் கொடுக்கிறார்கள். இதில் கண்ணம்மாவின் அம்மாவாக பார்வதி என்ற கேரக்டரில் ஒரு புகைப்படம் வைக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி அந்த புகைப்படத்தில் இருப்பது வேறு யாரும் இல்லை. பிரபல சீரியல் மற்றும் திரைப்பட நடிகை தீபாதான். மாயாண்டி குடும்பத்தார், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த தீபா விஜய் டிவி நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றவர். இவருடைய புகைப்படம்தான் கண்ணம்மாவின் அம்மாவாக பாரதி கண்ணம்மா சீரியலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.