உலகின் பல பகுதிகளிலும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மக்களை வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். இதனால் சிறப்புகளும் அதிகரித்து வருகிறது. மனதுக்கு நெருக்கமானவர்களை நோயின் பறிகொடுப்பது போன்ற கொடுமையான விஷயம் வேறொன்றும் இல்லை.
இந்நிலையில் புகழ்பெற்ற நடிகையும் உலக அழகியுமான லாரா தத்தா ஒரு பதிவு இத்துளளார் அதில் "நான் என் அமெரிக்க நண்பரை இழந்து விட்டேன். வெறும் 17 நாட்களில் அவர் இறந்து விட்டார். அவருக்கு எந்த வியாதியும் இல்லை. இதனால் வயதானவர்களுக்கு மட்டும் தான் இந்த நோய் வரும் என்று நினைப்பது தவறு. வாழ்க்கை எவ்வளவு நிலையற்றது என்பதை நான் அறிந்து கொண்டேன் எல்லாம் சரியாக இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியவில்லை. நாளை தினம் உயிரோடு இருப்போமா என்பதே கேள்வி குறியாகி இருக்கிறது. . இருக்கும் வரை சந்தோஷமாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.