இன்று அனைத்து போட்டியாளர்களும் ஒன்றுகூடி பாலாவை எதிர்ப்பது போல இருக்கிறது. அவர் பெண்களுக்கு எதிராக சர்ச்சையான கருத்தை வெளியிட்டாரா என்பதைப் பற்றி தெளிவாக தெரியவில்லை. இருந்தும் போட்டியாளர்கள் அவரை மொத்தமாக எதிர்ப்பதையும் அவர் தனியாக எதிர்த்து நிற்பதையும் காணமுடிகிறது.
பிக்பாஸ் பற்றி 'பகல் நிலவு' சீரியல் நடிகையான சௌந்தர்யா அளித்திருக்கும் பேட்டியில் பாலா மற்றும் மற்ற போட்டியாளர்கள் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் பாலாவை பார்த்தாலே எனக்கு பிடிக்கவில்லை. அவர் செய்யும் பல விஷயங்கள் மிகவும் கடுமையாக இருக்கிறது. அவர் சிறுவயதில் பாதிக்கப்பட்டிருந்தாலும் இத்தனை கோபமாக நடந்துகொள்வது ஏற்புடையது அல்ல. அவர் நிச்சயமாக மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக தான் இப்படி எல்லாம் செய்கிறார்" என்று என்று கூறியுள்ளார்.
அதேபோல் அனிதாவை பற்றி கூறும் பொழுது "அவர்கள் இன்னும் கொஞ்சம் மெச்சூரிட்டியுடன் நடந்து கொள்ளலாம், இப்படி எதற்கெடுத்தாலும் யோசிக்க வேண்டாம்" என்று அவர் கூறியுள்ளார். ஷிவானி பற்றி கூறும் பொழுது "மெழுகு சிலை போல அங்குமிங்கும் நடந்து கொண்டே இருக்கிறார். ஆனால் யாரிடமும் பேசாமல் இருப்பதற்கு, வீட்டிலேயே இருந்திருக்கலாமே" என்று தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்