இளம் நடிகை, தன்னிடம் அத்துமீறி நடந்த டாக்சி ட்ரைவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.
பெங்காலி சினிமாவில் நடிகையாக பிரபலமானவர் மிமி சக்ராபொர்த்தி. இதையடுத்து இவர் தற்போது எம்.பி-ஆகவும் உள்ளார். இவர் அண்மையில் தனக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை இரவு, அவர் காரில் வந்து கொண்டிருந்த போது, அவர்கள் அருகில் வந்த கால் டாக்சி ட்ரைவர் அவரை பார்த்து தவறான வார்த்தைகளை சொல்லியுள்ளார். மேலும் அவர் குடித்தும் இருந்துள்ளார்.
இதையடுத்து நடிகை தனது காரை நிறுத்தி, அவருக்கு பாடம் கற்பிக்க முயல, ஆட்கள் அங்கு சேர்ந்ததால், அந்த டாக்சி ட்ரைவர் உடனடியாக அங்கிருந்து சென்றுள்ளார். இதை தொடர்ந்து கொல்கத்தா போலீஸில் அவர் புகாரளித்துள்ளார். மேலும் அத்துமீறி பேசிய அந்த டாக்சி ட்ரைவரை காவல்துறையினர் கைது செய்திருப்பதாகவும் நடிகை தெரிவித்துள்ளார்.