ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாவர் ஆத்மிகா. அதனைத் தொடர்ந்து ஆத்மிகா, கார்த்திக் நரேன் இயக்கத்தில் 'நராகசூரன்' உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுவயதில் தனது அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, கடந்த ஜூன் 26 ஆம் தேதி அவரது அப்பா மரணமடைந்ததாக வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, யார் இதனை படக்கிறீர்களோ, உங்கள் பெற்றோர்களை அணைத்துக்கொள்ளுங்கள், அவர்கள் உங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை தெரிவியுங்கள். அதுதான் எனக்கு ஆறுதலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.