''கணவருடன் அப்பப்போ சண்ட.. அந்த லைஃப்ல அப்படி என்ன தான் இருக்கோ ?'' - அலுத்துக்கொண்ட பிரபல நடிகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இயக்குநர் அகத்தியனின் மகளான விஜயலக்ஷ்மி வெங்கட் பிரபு இயக்கிய 'சென்னை 28' படம் திரையுலகுக்கு அறிமுகமானார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற மிஷ்கினின் 'அஞ்சாதே', 'அதே நேரம் அதே இடம்', உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கி வரும் 'கசட தபற' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

பின்னர் பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு ரசிகர்களை கவர்ந்த அவர், நாயகி என்ற சீரியலிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை விஜயலக்ஷ்மி இயக்குநர் ஃபெரோஸை காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார். ஃபெரோஸ் கிருஷ்ணா நடிப்பில் 'பண்டிகை' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை விஜயலக்ஷ்மி தயாரித்திருந்தார்.

நடிகை விஜயலக்ஷ்மி மற்றும் ஃபெரோஷ் தம்பதியினருக்கு நிலன் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் நடிகை விஜயலக்ஷ்மி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், ''நெட்ஃபிளிக்ஸ் அமேஷான் பிரைம்.. நிலனுடன் விளையாட்டு ... செக்கிங் இன்ஸ்டாகிராம்.. வாட்ஸ் அப் குக்கிங் சாப்பாடு, அப்புறம் தான் வேலை செய்யும் ரூமை விட்டு வராத கணவருடன் அப்பப்போ சண்டை. அப்படி என்ன உங்க குராண்டின் வாழ்க்கையில் இருக்கு அப்படி எதாச்சும் சுவாரஸியமா இருக்கா ? என்று குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor

பிக்பாஸ் பிரபலம் நடிகை விஜயலக்ஷ்மி தனது கணவரின் வொர்க் ஃபிரம் ஹோம் அலப்பறைகள் குறித்து பதி

People looking for online information on Feroz, Instagram, Vijayalakshmi Ahathian will find this news story useful.